/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரம் மருத்துவக் கல்லுாரியில் தீ விபத்து
/
விழுப்புரம் மருத்துவக் கல்லுாரியில் தீ விபத்து
ADDED : ஏப் 01, 2024 04:22 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், மருத்துவக்கழிவுகள்எரிந்து சாம்பலாகின.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி உள்ளது.
இங்கு, மருத்துவமனை பின்புறம் மருத்துவக் கழிவுகளும் ,குப்பைகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4:30 மணியளவில், இப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் குப்பை கழிவுகள் எரிந்தது. தொடர்ந்து, குடோனில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலின்பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள், சிறப்பு நிலைய அலுவலர் ராஜவேலு, விஜயகுமார் தலைமையில் விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

