ADDED : மார் 03, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாரத்தில் முட்புதரில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சாரம் வேலன் நகரில் உள்ள காலி மனையில்முட் புதர் அடர்ந்து காய்ந்து உள்ளது. இங்குள் முட்புதரில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பதட்டம் ஏற்பட்டது.