/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி': வாக்காளர்களை கவர பழங்கால பாத்திரங்களின் அணிவகுப்பு
/
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி': வாக்காளர்களை கவர பழங்கால பாத்திரங்களின் அணிவகுப்பு
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி': வாக்காளர்களை கவர பழங்கால பாத்திரங்களின் அணிவகுப்பு
புதுச்சேரியில் முதல் முறையாக 'பசுமை ஓட்டு சாவடி': வாக்காளர்களை கவர பழங்கால பாத்திரங்களின் அணிவகுப்பு
ADDED : ஏப் 19, 2024 05:30 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பசுமை ஓட்டு சாவடியை மாநில முதன்மை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆய்வு செய்தார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுதும் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 'பிங்க்' ஓட்டுச் சாவடிகள் 60 உட்பட 967 ஓட்டு சாவடிகளை புதுச்சேரி தேர்தல் துறை அமைத்துள்ளது.
மேலும், வாக்காளர்களை கவரும் வகையில், பசுமை ஓட்டு சாவடி, 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டடமான, புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு ஓட்டு சாவடிகள் உள்ளன.
சிறுதானிய பயிர்களை கொண்டு பிரதான வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குலையுடன் கூடிய வாழை மரங்கள், பச்சை தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மண் பானை குடிநீர், பதநீர், கூழ் ஆகியவை இன்று வழங்கப்பட உள்ளது.
ஓட்டு சாவடியில் வாக்காளர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க, சுகாதாரத்துறையில் பணியாற்றும் சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனாரின் அரிய சேகரிப்பான பழங்கால பித்தளை பாத்திரங்கள், ரயில் அடுக்கு, கூஜா, வாளி, வெற்றிலைப் பாக்கு பெட்டி, முறுக்கு அச்சு, இலை வடிகட்டி சொம்பு என, 171 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டைய தமிழர்களின் வீடுகளை அலங்கரித்த, அவர்களது வாழ்வியலை விளக்கும் அரிய பாத்திரங்களின் தொகுப்பு வாக்காளர்களை நிச்சயமாக கவர்ந்திழுக்கும்.
மேலும், ஆசிரியர் கிருஷ்ணன் காகித கூழில் உருவாக்கிய 50க்கும் மேற்பட்ட காகித சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மாநில முதன்மை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், துணை தேர்தல் அதிகாரி ஆதர்ஷ், துணை தேர்தல் நடத்தும் அதிகாரி கந்தசாமி, சிறப்பு அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஓட்டளிப்பதற்காக ஓட்டு சாவடிக்கு வரும் வாக்காளர்கள் வாகனங்களை தவிர்த்து விட்டு, நடந்து வருமாறும் தேர்தல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

