/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டையில் கொடி அணிவகுப்பு
/
முத்தியால்பேட்டையில் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 06, 2024 05:35 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் போலீசார் கொடி அணி வகுப்பு நடந்தது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால், பதற்றமான ஓட்டுச்சாவடி உள்ள பகுதிகளில் போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். கிழக்கு பிரிவு போலீஸ் சார்பில் முத்தி யால்பேட்டை பகுதியில், நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
எஸ்.பி., லட்சுமி சவுஜான்யா, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன், குமார் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் துவங்கிய அணிவகுப்பு, திருவள்ளுவர் நகர், சின்னையாபுரம், எஸ்.வி.பட்டேல் சாலை, குருசுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அணிவகுப்பு நடந்தது.

