/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பத்திரப்பதிவு துறை ஊழல்துறையாக மாறியுள்ளது மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

ADDED : செப் 17, 2024 05:05 AM
காரைக்கால், : புதுச்சேரி மாநிலத்தில் பத்திரப்பதிவு துறை ஊழல் துறையாக மாறி உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், உலக அளவில் கச்சா என்னை விலை பீப்பாய்க்கு 70 டாலர் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலை குறையவில்லை. கடந்த 10ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி 20லட்சம் கோடி மத்திய ஆளும் மோடி அரசு கொள்ளை அடித்துள்ளது.
புதுச்சேரியில் மின் கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது.ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக உள்ளார். மின் கட்டணம் உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்தியா கூட்டணி சார்பில் நாளை (18 ம் தேதி) பந்த் போராட்டம் நடக்கிறது.
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோவில் நில மோசடியில் காங்., சார்பில் நீதிமன்றம் சென்று நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் காரைக்காலிலும் கோவில் நிலங்கள் மோசடி தொடர்பாக உரிய ஆதாரங்கள் திரட்டி காங்., சார்பில் நீதிமன்றம் செல்வோம். இந்த நில மோசடிகளில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மூவர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பத்திரப்பதிவு துறை ஊழல்துறையாக மாறியுள்ளது என கூறினார்.