/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்கியத்திற்கு வீடு வழங்குவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
/
போக்கியத்திற்கு வீடு வழங்குவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
போக்கியத்திற்கு வீடு வழங்குவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
போக்கியத்திற்கு வீடு வழங்குவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
ADDED : ஏப் 06, 2024 05:23 AM
புதுச்சேரி: போக்கியத்திற்கு வாடகை வீடு வழங்குவதாக கூறி, ரூ. 5.5 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி, வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 31; தனியார் நிறுவன ஊழியர். வாடகை வீடு தேடினார். நெல்லித்தோப்பு அண்ணா நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி ஞானமேரிக்கு சொந்தமான வீடு வாஞ்சிநாதன் தெருவில் இருப்பதாக தெரியவந்தது.
வாடகை வீட்டிற்கு போக்கிய தொகை பேசப்பட்டது. முதற்கட்டமாக ரூ. 2 லட்சம் வழங்கினர். வீட்டில் சிறிய வேலைகள் முடித்த பின்பு கடந்த மாதம் 7ம் தேதி ரூ. 1.5 லட்சம் கொடுத்து, நரேஷ்குமார் குடும்பத்தினர் வாடகை வீட்டில் குடியேறினர்.
பால்ராஜ் லெனின் வீதியில் மெடிக்கல் ஷாப் திறக்க உள்ளதாக கூறி, மேலும், ரூ. 2 லட்சம் கடனாக கேட்டார். நரேஷ்குமார் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு ரூ.2 லட்சம் கொடுத்தார்.
கடந்த 26ம் தேதி திடீரென ஆரோக்கியமேரி என்பவர் குடும்பத்தினர், நரேஷ்குமார் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வந்து, இது தங்கள் வீடு என கூறினர். விசாரித்தபோது, பால்ராஜ், ஞானமேரி இருவரும் கடந்த 2021ம் ஆண்டே வீட்டை ஆரோக்கியமேரி என்பவருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசில் நரேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், பால்ராஜ், ஞானமேரி மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

