/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி வகுப்பறையில் சுவர் ஓவியம் வரைய நிதி
/
அரசு பள்ளி வகுப்பறையில் சுவர் ஓவியம் வரைய நிதி
ADDED : பிப் 25, 2025 04:50 AM

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலை பள்ளியில், சுவர் ஓவியம் வரைவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார்.
ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சிட்டி தலைவர் அறிவழகன், செயலாளர் ஆறுமுகம், துணை தலைவர் ஆளவந்தான், விரிவுரையாளர் துர்காதேவி ஆகியோர், பள்ளி வகுப்பறைகளில், வண்ண சுவர் ஓவியங்கள் வரைவதற்கான நிதியுதவி வழங்கினர்.தொடர்ந்து, மகாகவி பாரதி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த தாய்மொழி தின விழாவில், 'தாய் மொழியின் வளர்ச்சி மற்றும் சிறப்பு குறித்து, மாணவர்களின் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
ஆசிரியை ரேணு நன்றி கூறினார்.

