ADDED : செப் 01, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சூரமங்கலத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரமங்கலம் ஏரிக்கரையில் இருந்த சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் நெட்டப்பாக்கம் சீனிவாச நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த பிரகாஷ் 26, என்பதும், அவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.