ADDED : மார் 15, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மொளப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் புனிதவதி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் லோகநாதன் வரவேற்றார். ஆசிரியர் மகேஷ் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார்.
துணை சபாநாயகர் ராஜவேலு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிகளை வழங்கினார்.
சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனிதா, சித்த மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியை ஆசிரியை புஷ்பவள்ளி தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயந்தி, மூர்த்தி, கிருபா, மகேஸ்வரி, நிஷ்கலா, கவுசல்யா, சந்தியா ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஆசிரியர் முருகபாரதி நன்றி கூறினார்.