/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
/
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
ADDED : ஜூன் 16, 2024 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலம் மீட்கப்படும் என, கவர்னர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சித்தர்களும், ஆன்மிக வாதிகள் வசிப்பிடமான புதுச்சேரியில் ஏராளமான சித்தர் பீடங்கள், கோவில்கள் உள்ளன.
மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், திருக்காமீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார், திருநள்ளார் சனீஸ்வர பவான் கோவில் உட்பட மொத்தம் 243 கோவில்கள் உள்ளன.
இக்கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவில்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.
கோவில் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது.
இன்றைய விலைவாசி நிலவரப்படி வாடகை, போக்கியம் தருவதிற்கு பதில், தற்போதைய மார்க்கெட் மதிப்பில் நுாற்றில் ஒரு பங்கு வாடகையை கொடுத்து கொண்டு பல ஏக்கர் நிலங்களை அனுபவித்து வருகின்றனர்.
சிலர் கோவில் நிலங்களை பகடி என உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். சமீபத்தில் பிளாட் போடப்பட்ட காமாட்சியம்மன் கோவில் நிலம் மீட்கப்பட்டது.
கோர்காடு விநாயகர் கோவில் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
நேற்று பழமையான கட்டடங்களை ஆய்வு செய்த கவர்னர் ராதாகிருஷ்ணனிடம், கோவில் நிலங்கள் அபகரிப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, 'கோவில் நிலங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் எடுக்க கூறியுள்ளேன். கோவில் நிலத்தை ஒரு சதுரடி கூட யாராலும் அபகரிக்க முடியாது.
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் திரும்ப பெறப்படும். நிலம் மீட்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கவர்னர் தெரிவித்தார்.