ADDED : ஏப் 04, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, அரசு கொறடா ஆறுமுகம் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தர்.
புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, நேற்று அரசு கொறடா ஆறுமுகம் பிரசாரம் செய்தார். இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட, ஜிப்மர் குடியிருப்பு வளாகம் பகுதி, கோரிமேடு, கஸ்துாரி பாய் நகர், வழுதாவூர் சாலையில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் நேரில் சென்று ஓட்டு கேட்டார்.
அவருடன், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் வீரசாமி, சிவக்குமார் உட்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

