/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாவீர் ஜெயந்தியையொட்டி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
மகாவீர் ஜெயந்தியையொட்டி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
மகாவீர் ஜெயந்தியையொட்டி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
மகாவீர் ஜெயந்தியையொட்டி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஏப் 21, 2024 05:19 AM
புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியையொட்டி, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
அனைத்து உயிரினங்களும், அன்போடும் மரியாதையோடும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை போதித்த பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் ஜைன சமய கொள்கைகளை பின்பற்றும் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
ஜைன மதத்தின், 24 வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர் பிறந்த நாள் என்பது அகிம்சையை கடைபிடிக்கவும், நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தவும் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த நன்னாள், பகவான் மகாவீரரின் அருளாசி அனைவரது வாழ்க்கையையும் உண்மை, அகிம்சை மற்றும் இரக்க குணத்தால் நிரப்பப்பட்டும், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பையும், கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும். அன்பும் அமைதியும் அகிம்சையும் எங்கும் நிலவட்டும்.
அனைவருக்கும் இனிய மகாவீரர் ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

