/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் தினம் முதல்வர் வாழ்த்து
/
செவிலியர் தினம் முதல்வர் வாழ்த்து
ADDED : மே 12, 2024 05:02 AM
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி செவிலியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி: ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்கும் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக இருப்பவர்கள் செவிலியர்கள். சுகாதாரத் துறையில் இவர்களின் தன்னலமற்ற சேவையை, பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பொருளாதாரம் ஆரோக்கியமானதாக இருந்தால், தேசம் வலிமையாக உருவெடுக்கும். எனவே தான் சர்வதேச செவிலியர் கவுன்சிலானது இந்த ஆண்டின் கருப்பொருளாக 'நமது செவிலியர் நமது எதிர்காலம்' என்கிற வாசகத்தை அறிவித்துள்ளது.
மற்றவர்கள் சுகாதாரமாக, நலமாக வாழ, அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும் கடின உழைப்பையும் கொடுக்கும் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.