தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவனத்தை ஈர்த்த அரங்குகள்

கவனத்தை ஈர்த்த அரங்குகள்

கவனத்தை ஈர்த்த அரங்குகள்


ADDED : ஆக 09, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இடியாப்பம் மல்டி மேக்கர் வீடுகளிலேயே இடியாப்பம், முறுக்கு உள்ளிட்ட 15 வகையான திண்பண்டங்கள் செய்வதற்கான இடியாப்பம் மல்டி மேக்கர் கருவி விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் 5490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த மெஷின் எக்ஸ்போவில் 3300 ரூபாய்க்கு ஆபரில் விற்பனை செய்யப்படுகிறது.

ராசிக்கல் மோதிரம் எந்த ராசிக்காரர்கள் என்ன ராசிக்கல் அணிவது என்பது குறித்து ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு ஐம்பொன், நவரத்தினக்கல் மற்றும் வெள்ளி மோதிரங்கள், சுவாமி டாலர்கள், ராசிக்கல் மோதிரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கருங்காலி, ருத்ராட்சம், சந்தனம், ஸ்படிகம், துளசி மாலைகள் ஐம்பொன் மற்றும் வெள்ளியில் கிடைக்கிறது.

கிளின்டிக்யூ ஆர்ட் ஸ்டால் கேரளாவை சேர்ந்த கிளின்டிக்யூ ஆர்ட் ஸ்டால் அமைந்துள்ளது. இதில், கை  வண்ணத்தால் வரைந்து ஸ்டோன்கள் ஒட்டப்பட்ட முருகன், விநாயகர், இயேசு உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் போட்டோக்கள், இயற்கை காட்சிகள், பாரம்பரிய சின்னங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் மற்றும் போட்டோக்கள் பார்வையாளர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது. 

‘டாய்ஸ் ஜோன்’ குழந்தைகளை ஷாப்பிங்கிற்கு அழைத்து வந்தால் விளையாட்டு பொருட்களை விரும்பி வாங்குவர்கள். அப்படி குட்டீஸ்களை குஷிப்படுத்த விளையாட்டு பொருட்கள் ஸ்டால்கள் அதிகளவில் உள்ளது. அந்த ஸ்டால்களில் விளையாட்டு பொருட்கள், டாய்ஸ் கீ ஜெயின், எழுது பொருட்கள் குட்டீஸ்களுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மர கலைக்கூடம் மரங்களில் தயாரிக்கப்பட்ட கலை நயமிக்க பொருட்கள் விற்பனை அரங்கம் உள்ளன. இங்கு நமது பழங்காலத்தை நினைவூட்டும் வகையில் மரத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு கரண்டி வகைகள், தண்ணீர் குடுவைகள், டெலிபோன் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அலங்கார ஊஞ்சல் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சாரதா எம்ப்போரியம் அரங்கில் பல்வேறு டிசைன்களில் ஊஞ்சல்கள், டைனிங் டேபிள், டேபிள்கள் விற்பனை செய்யப்படுகிறது. பார்க்கும்போதே வாங்க வேண்டும் என்று தோன்றும் வகையில் தத்ரூபமாக பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us