/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவித்திறன் பாதுகாப்பு கருத்தரங்கு
/
செவித்திறன் பாதுகாப்பு கருத்தரங்கு
ADDED : மார் 04, 2025 04:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை சார்பில், உலக செவித்திறன் நாளை முன்னிட்டு, செவித்திறன் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி உலக செவித்திறன் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று புதுச்சேரி அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை சுகாதாரத் துறை இயக்குநர் துவக்கி வைத்தார். இதில், 200க் கும் மேற்பட்ட டாக்டர்கள், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பயிற்சி செலவியர்கள் கலந்து கொண் டனர்.
ஊர்வலத்தின் போது, மக்களிடையே காது கேளாமை மற்றும் செவித்திறனை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், செவித்திறன் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கை, புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவின் தலைவர் ஸ்டாலின் சிவகுருநாதன் செய்திருந்தார்.