/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமாயணத்தை தவறாக சித்தரித்து நாடகம் இந்து முன்னணி தலைவர் கண்டனம்
/
ராமாயணத்தை தவறாக சித்தரித்து நாடகம் இந்து முன்னணி தலைவர் கண்டனம்
ராமாயணத்தை தவறாக சித்தரித்து நாடகம் இந்து முன்னணி தலைவர் கண்டனம்
ராமாயணத்தை தவறாக சித்தரித்து நாடகம் இந்து முன்னணி தலைவர் கண்டனம்
ADDED : ஏப் 01, 2024 06:25 AM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில், ராமாயணத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் தேச விரோத சக்திகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இதுகுறித்து, இந்து முன்னணி தலைவர் சனில்குமார் அறிக்கை:
புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்களின் துாண்டுதலின் பேரில் தொடர்ந்து, மாணவர்களை வைத்து தேசத்திற்கு விரோதமான செயல்களில் பல்கலைக்கழகம் ஈடுப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் தேசிய குடியுரிமை உரிமைச் சட்டத்தை எதிர்த்து கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தேசவிரோத மற்றும் இந்து விரோத கருத்தரங்கங்களை பல்கலைக்கழத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
பல்கலைகழகத்தில் எழினி என்ற கலைத் துறையினர் ஏற்பாட்டில் ராமாயண நிகழ்ச்சியை இழிவாக சித்தரிக்கும் வகையிலும். ராமனின், வாழ்க்கை வரலாற்று கதையை நாடகம் என்னும் பெயரில் இழிவாக சித்தரித்து மாணவர்கள் மத்தியில் அரங்கேற்றம் செய்துள்ளனர்.
இந்த நாடகத்தில் ராவணனும், சீதையும், தவறான முறையில் நடந்து கொள்வது போன்றும். இவர்கள் ஒன்று சேர்ந்து கூத்தாடுவது போலவம், அனுமன் கதாபாத்திரம் ராமனிடம் சீதையை பற்றி இழிவாக கூறுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றி உள்ளனர். ராமபிரானை தெய்வமாக வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்கள்.
எனவே புதுச்சேரி அரசு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

