ADDED : செப் 09, 2024 04:55 AM

புதுச்சேரி: குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தோட்டக்கலை பராமரிப்பு பயிற்சி நடந்தது.
இந்திய விவசாய கவுன்சில் நிதி உதவியுடன் ஒரு மாதம் நடந்த பயிற்சி முகாமில், பயிர் பெருக்கமுறை, நாற்றங்கால் தொழில்நுட்பம், மண்புழு உரம் தயாரித்தல், குழிதட்டு நாற்றங்கால் தொழில்நுட்பம், மண் பரிசோதனை முறை, உரநிர்வாகம், நீர்ப்பாசன முறை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், மண் கலவை தாயரித்தல், தொட்டியில் மண் மாற்றும் முறை, இயற்கை உரம் தயாரித்தல், மாடி தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல், நுண் கீரை வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில், விவசாய நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு, பயிற்சி கையேட்டை வழங்கினார்.
வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் மணிமேகலை வரவேற்றார்.
முதன்மை பயிற்றுநர் சந்திரதரன் கருத்துரை வழங்கினார்.
நெல் அபிவிருத்தியாளர் நரசிம்மன், வேளாண் நிலைய முதல்வர் விஜயகுமார், சாமிநாதான் ஆராய்ச்சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கிரிஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
பண்ணை மேலாளர் அமலோற்பவநாதன் நன்றி கூறினார்.