sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்சிக்கு வர முடியாதவர்கள் அரிசி எப்படி கொடுப்பார்கள்

ஆட்சிக்கு வர முடியாதவர்கள் அரிசி எப்படி கொடுப்பார்கள்

ஆட்சிக்கு வர முடியாதவர்கள் அரிசி எப்படி கொடுப்பார்கள்


ADDED : ஏப் 11, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 04:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியில் இல்லாதவர்களும், ஆட்சிக்கு வர முடியாதவர்களும், ரேஷன் கடைகளில், வெள்ளை அரிசி கொடுக்கப்போவதாக சொல்வது, எப்படி சாத்தியம் என்று புரியவில்லை, என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் நமச்சிவாயத்தை ஆதரித்து, உழவர்கரை தொகுதி, பாவாணர் நகர், ஜவகர் நகரில் முதல்வர் ரங்கசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் பேசியதாவது;

கடந்த காங்., தி.மு.க கூட்டணி ஆட்சியில், எந்த திட்டமும்செயல்படுத்தப்படவில்லை. புதுச்சேரிக்கு அவர்களால் எந்த வளர்ச்சியையும் கொண்டு வர முடியவில்லை. காரணம், அப்போதிருந்த கவர்னருடன் கருத்து வேறுபாட்டில் போராட்டங்கள் நடத்தி கொண்டு, நாட்களை கடத்தி கொண்டிருந்தனர்.

நம்முடைய அரசு பொறுப்பேற்றவுடன் முதியோர்களுக்கு ரூ.500 உதவித்தொகை உயர்த்தி கொடுக்கப்பட்டது. உதவித்தொகை கோரி, விண்ணப்பித்த, 27 ஆயிரம் முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும்லேப்டாப் கொடுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தி வருகிறது. அதே வகுப்பை சேர்ந்த மக்களுக்கு நிதியை முழுவதுமாக செலவிட்டு வருகிறது.

பொதுமக்கள் எங்களுக்கு பணம் வேண்டாம், அரிசி போடுங்கள் என்று கேட்கின்றனர். அதை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், ஆட்சியில் இல்லாதவர்களும், ஆட்சிக்கு வர முடியாதவர்களும், நாங்கள் வெள்ளை அரிசி கொடுப்போம் என்று கூறுகின்றனர்.

மத்தியில் மீண்டும் ஆளப்போவது தே.ஜ கூட்டணி அரசு தான். அப்படியிருக்கையில், இங்கு ஆளும் நம்முடைய அரசுக்கு, மத்திய அரசு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us