/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநிலம் வளர்ச்சி அடையும்' பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பேச்சு
/
'நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநிலம் வளர்ச்சி அடையும்' பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பேச்சு
'நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநிலம் வளர்ச்சி அடையும்' பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பேச்சு
'நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநிலம் வளர்ச்சி அடையும்' பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 04:38 AM

புதுச்சேரி: டில்லியில் நமச்சிவாயமும், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியும் இருக்கும்போது மாநிலம் இரட்டிப்பு வளர்ச்சி அடையும் என பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் பேசினார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில செயல் வீரர்கள் கூட்டம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. பா.ஜ.,மாநில தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார். பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் பேசியதாவது:
புதுச்சேரியில் காங்., எம்.பி., வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை விமர்ச்சிக்க விரும்பவில்லை. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் புதுச்சேரிக்கு எதுமே செய்யவில்லை. மவுனமாக இருந்துவிட்டார். இப்போதும் அவருக்கு ஓட்டுபோட்டால் எதுவும் நடக்கபோவதில்லை.
அடுத்த ஐந்து ஆண்டும் மவுனமாக ஓடிவிடும். புதுச்சேரி மக்களுக்காக சேவையாற்றும் எம்.பி., தான் நமக்கு தேவை. அதுக்கு நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து லோக்சபாவுக்கு அனுப்ப வேண்டும்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. இன்னும் பல துறைகளில் மேம்பட வேண்டும். அதற்கு மத்திய அரசின் உதவி தேவை.
நமச்சிவாயத்தை தேர்வு செய்து, லோக்சபாவுக்கு அனுப்பினால் மாநிலம் வளர்ச்சி பாதைக்கு செல்லும். நமச்சிவாயம் வெற்றிப் பெற்றால், மத்திய அமைச்சராக இருப்பார். டில்லியில் நமச்சிவாயமும், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியும் இருக்கும்போது, மாநிலம் இரட்டிப்பு வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் சாய்சரவணன் குமார், பா.ஜ., எம்.எல்.ஏ.கள், முன்னாள் எம்.எல்.ஏ.கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

