/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மார்பக புற்றுநோயை கண்டறியும் மம்மோகிராம் கருவி திறப்பு விழா
/
மார்பக புற்றுநோயை கண்டறியும் மம்மோகிராம் கருவி திறப்பு விழா
மார்பக புற்றுநோயை கண்டறியும் மம்மோகிராம் கருவி திறப்பு விழா
மார்பக புற்றுநோயை கண்டறியும் மம்மோகிராம் கருவி திறப்பு விழா
ADDED : செப் 17, 2024 05:14 AM

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்பு புற்றுநோய் கண்டறியும் மம்மோகிராம் கருவி திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரேடியாலஜி துறையின் புதிய மம்மோகிராம் கருவியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
இதில், ரமேஷ் எம்.எல்.ஏ., மருத்துவக் கல்லுாரியின் இயக்குநர் டாக்டர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், ரேடியாலஜி துறையின் தலைவர் டாக்டர் சீனுவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மம்மோகிராம் கருவி, பெண்களிடையே மார்பகப் புற்றுநோயை தெளிவாகவும், துல்லியமாகவும் கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நோய் தாக்கத்தினை துல்லியமாக கண்டறியலாம்
விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசுகையில், மம்மோகிராம் சாதனம் புதுச்சேரியில் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த வசதி மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.