/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான சேவையை துவக்க இண்டிகோ நிறுவனம் ஆர்வம்
/
விமான சேவையை துவக்க இண்டிகோ நிறுவனம் ஆர்வம்
ADDED : ஏப் 21, 2024 05:21 AM
புதுச்சேரியில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் துவங்க இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் 90 பேர் பயணிக்க கூடிய ஒரே விமானம் தினசரி ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்து, இங்கிருந்து பெங்களூரு செல்கிறது.
பின், அங்கிருந்து புதுச்சேரி வந்து, மீண்டும் ஹைதராபாத்திற்கு செல்கிறது. இந்த நிறுவனத்தின் விமான சேவையில் அடிக்கடி பராமரிப்பு பணி, தொழில் நுட்ப கோளாறு, பருவகால மாற்றம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக விமான சேவை அடிக்கடி ரத்தாகி வந்தது.
இதனால் மாற்று விமானங்கள் இல்லாமல் விமான சேவை புதுச்சேரி வாசிகளுக்கு கிடைக்காமல் போனது. இதனையடுத்து, கடந்த மார்ச் 30ம் தேதி முதல் தனது விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிறுத்தி விட்டு, வெளியேறியது.
தற்போது விமான சேவை இல்லாமல் உள்ள புதுச்சேரியில் மீண்டும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது.
அதையொட்டி கடந்த 15ம் தேதி புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ விமான நிறுவன பெண் அதிகாரி, விமான நிலைய இயக்குனர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார்.
அதன் பின், விமான நிலையத்தை பார்வையிட்டு புறப்பட்டு சென்றார். வரும் ஜூலை மாதத்தில் இருந்து புதுச்சேரியில் விமான சேவை துவங்கும் எனவும், மேலும் இண்டிகோ விமான நிறுவனத்திடம் ஏராளமான விமானங்கள் கைவசம் உள்ளதால், விமான சேவை பாதிப்பில்லாமல் கிடைக்கும் என விமான நிலைய ஊழியர்கள் கூறினர்.

