/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் நுட்ப பூங்கா அமைச்சர் தகவல்
/
தொழில் நுட்ப பூங்கா அமைச்சர் தகவல்
ADDED : ஆக 15, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில் பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
சட்டசபையில், தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசுகையில், 'ரோடியர் மற்றும் பாரதி பஞ்சாலைகள் இயங்காத நிலையில் இந்த இடங்களை மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் எண்ணம் அரசுக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், 'ஆலை இடங்களை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்த அரசு திட்டம் தயாரித்து வருகிறது. இங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஏக்தா மால் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்'என, தெரிவித்தார்.