அடிக்காசு வசூலை நகராட்சியே மேற்கொள்ள வலியுறுத்தல்
அடிக்காசு வசூலை நகராட்சியே மேற்கொள்ள வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2026 06:25 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில், சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்க இரண்டாவது கிளை மாநாடு நேற்ற நடந்தது.
செல்வநாதன் வரவேற்பு இல்லத்தில் நடந்த மாநாட்டில், சங்க கிளை துணைத் தலைவர் அன்பழகன் வரவேற்றார். கிளைத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சங்க கவுரவ தலைவர் முருகன், சி.ஐ.டி.யு., மாநில துணைத் தலைவர் முருகன் சிறப்புரையாற்றினர். சங்க செயலாளர் ராமசாமி வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஸ்டெல்லா வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
சாலையோர சங்க மாநில தலைவர் அழகர்ராஜ், பொது செயலாளர் வடிவேல், பொருளாளர் வீரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனுவாசன் நிறைவுரையாற்றினார். சண்டே மார்க்கெட் சங்க நிர்வாகிகள் ரவி, மரிய பிரகாசம், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், நகராட்சி அறிவித்த வெண்டிங் கமிட்டி தேர்தலை நடந்த வேண்டும். அடிக்காசு வசூலை நகராட்சியே மேற்கொள்ள வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிளை செயல்தலைவர் ரவி நன்றி கூறினார்.
