ADDED : மார் 15, 2025 06:30 AM

புதுச்சேரி: யோகாசன பாரத், சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம், இன்ஸ்டிடியூட் ஆப் சல்யூடோஜெனிசிஸ் காம்ப்ளிமெண்டரி மெடிசன் பாலாஜி வித்யாபீத் சார்பில், பாலாஜி வித்யா பீத் பல்கலைக் கழக வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.
சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்க செயலாளர் தயாநிதி தலைமை தாங்கினார். துணை செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். பாலாஜி வித்யாபீத், யோகா சிகிச்சை பள்ளி துணை முதல்வர் மீனா ராமநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் துணை இயக்குனர் வைத்தியநாதன், பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் தனசேகர், பாலாஜி வித்யாபீத் நிர்வாக இயக்குநர் ஆஷா சுரேஷ்பாபு, டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி, அல்லைட்ஹெல்த் சயின்ஸ் பள்ளி முதல்வர் உமா, சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்க துணைத் தலைவர்கள் கஜேந்திரன், தேவசேனா பவனானி, பொருளாளர் சண்முகம், யோகாஞ்சலி நாட்டியாலயம் லலிதா சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கான யோகாசனப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.