/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.டி. ஊழியரிடம் ரூ. 15 லட்சம் மோசடி
/
ஐ.டி. ஊழியரிடம் ரூ. 15 லட்சம் மோசடி
ADDED : செப் 02, 2024 01:12 AM
புதுச்சேரி : ஐ.டி. ஊழியரிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாகே பிராந்தியத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார் 55, இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அதில் ஆன்லைன் பங்குச்சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என இருந்தது இதனை நம்பிய சுனில்குமார் சிறு தொகையை முதலீடு செய்து, லாபம் பெற்று வந்துள்ளார். பின்னர் பல்வேறு தவணைகளில் ரூ. 15 லட்சம் முதலீடு செய்துள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த லாபத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுனில்குமார் பள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.