/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரிசங்கு நிலையில் மேரி கட்டடம் 2 முறை திறப்பு விழா நடந்தும் பாழாகும் அவலம்
/
திரிசங்கு நிலையில் மேரி கட்டடம் 2 முறை திறப்பு விழா நடந்தும் பாழாகும் அவலம்
திரிசங்கு நிலையில் மேரி கட்டடம் 2 முறை திறப்பு விழா நடந்தும் பாழாகும் அவலம்
திரிசங்கு நிலையில் மேரி கட்டடம் 2 முறை திறப்பு விழா நடந்தும் பாழாகும் அவலம்
ADDED : மே 05, 2024 04:23 AM

புதுச்சேரி கடற்கரையில் அமைந்திருந்த மேரி கட்டடம் மிக பழமை வாய்ந்தது. இக்கட்டடம், கடந்த 1870-71ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின்போது, பிரெஞ்சு கட்டடக் கலை நயத்துடன் கட்டப்பட்டது. இந்த பிரமாண்ட கட்டடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.
போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் பழுதடைந்தது. கடந்த 2014ம் ஆண்டு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் மேரி கட்டடத்தை மீண்டும் அதே இடத்தில் பழமை மாறாமல் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு, திட்ட அமலாக்க முகமை மூலமாக, ரூ.14.83 கோடி செலவில் கட்டுமான பணிகள் துவங்கியது.
690 சதுர மீட்டர் பிரதான கட்டடம், தரைத்தளம், முதல் தளம், கருத்தரங்கு கூடம், திருமண பதிவு அறைகள் என பாரம்பரிய பழைய கட்ட பாணியில் கட்டி முடிக்கப்பட்டது.
மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கட்டப்பட்டதால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, மேரி கட்டடத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், முறைப்படி புதுச்சேரி நகராட்சியிடம் மேரி கட்டடம் ஒப்படைக்கப் படவில்லை.
இதற்கிடையே, கடந்த சில மாதத்திற்கு முன், 2வது முறையாக முதல்வர் ரங்கசாமி மீண்டும் திறந்து வைத்தார்.
அதன் பிறகும் மேரி கட்டடம் ஒப்படைக்கப்படவில்லை. புதிதாக கட்டியுள்ள கட்டடத்தில் கவர்னர் அலுவலகத்தை இட மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. சில துறைகளின் செயலர்கள் தங்களின் அலுவலகத்தை புதிய கட்டடத்தில் மாற்றி கொள்ள போட்டி போட்டு வருகின்றனர்.
இதனால், மேரி கட்டடம் கட்டி முடித்து 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் பாழாகி வருகிறது.