தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சாதனை

ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சாதனை

ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சாதனை


ADDED : மே 12, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2024 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

பள்ளி சேர்மன் மணி, பள்ளி நிர்வாகி விஜயா மணி கூறியதாவது:

பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் எழுதிய 57 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பில் மாணவி மஞ்சுளா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம், மாணவிகள் நபிலா பானு 491, அகல்யா 481 மதிப்பெண்பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

490க்கு மேல் 2 பேரும், 475க்கு மேல் 5 பேரும், 450க்கு மேல் 15 பேரும், 400க்கு மேல் 33 பேரும் மதிப்பெண் எடுத்துள்ளனர். அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். கணிதத்தில் 4 பேர், ஆங்கிலத்தில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண், 99 மதிப்பெண்கள் 8 பேரும், 90க்கு மேல் 18 பேரும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மாணவி சுவேதா 561, ஆனந்தரூபிணி 555, தர்ஷினி 552 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். தமிழில் 3 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

பள்ளி 9 ஆண்டுகளாக 10ம் வகுப்பிலும், 5 ஆண்டுகளாக பிளஸ் 2விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாணவர்களுக்கு கல்வியுடன், நீட், ஜிப்மர், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., சிறப்பு வகுப்புகள், நடத்தப்படுகிறது. பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு தரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி' என்றார். முன்னதாக பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us