/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டேரிக்குப்பம் ஆஷா பணியாளர் தேசிய அளவில் விருதுக்கு தேர்வு
/
காட்டேரிக்குப்பம் ஆஷா பணியாளர் தேசிய அளவில் விருதுக்கு தேர்வு
காட்டேரிக்குப்பம் ஆஷா பணியாளர் தேசிய அளவில் விருதுக்கு தேர்வு
காட்டேரிக்குப்பம் ஆஷா பணியாளர் தேசிய அளவில் விருதுக்கு தேர்வு
ADDED : ஆக 12, 2024 04:53 AM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர் மத்திய அரசின் தேசிய அளவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காட்டேரி குப்பம், ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆஷா பணியாளர் பிரியா. இவரை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, 4 பிராந்தியங்களில் பணிபுரியும், 326 ஆஷா பணியாளர்களில் சிறந்த பணியாளராக மத்திய அரசு நேரடியாக தேர்வு செய்துள்ளது.
இதையொட்டி, அவருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது. அவரை கவுரவிக்கும் வகையில் வரும், 15ம் தேதி, டில்லி, செங்கோட்டையில் நடக்க உள்ள, சுதந்திர தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை போர்த்தி, நிதியுதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.