தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவி பாரதியார் லயன்ஸ் சங்கம்  புதிய நிர்வாகிகள் சேவை பணியேறப்பு

கவி பாரதியார் லயன்ஸ் சங்கம்  புதிய நிர்வாகிகள் சேவை பணியேறப்பு

கவி பாரதியார் லயன்ஸ் சங்கம்  புதிய நிர்வாகிகள் சேவை பணியேறப்பு


ADDED : ஆக 09, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கவி பாரதியார் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் சேவை பணி ஏற்பு விழா நடைபெற்றது.

முன்னாள் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., மோகன்தாஸ், முன்னாள் கூடுதல் செயலர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இந்தாண்டிற்கான புதிய தலைவராக பதவியேற்ற ராமசாமிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, செயலாளர் (நிர்வாகம்) பழனிவேல், செயலாளர் (சேவை திட்டம்) சுரேந்தர், பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஆளுநர் முரளி, புதிய நிர்வாகிகள் சேவை பணியேற்பு செய்தார்.

முதல் துணை ஆளுநர் கமல் கிேஷார் ஜெயின், இரண்டாம் துணை ஆளுநர் சிவகாந்தன், ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறினர். நிர்வாகிகள் சரவணன், சாஸ்தா மணிகண்டன், வாசுதேவன், செந்தில்குமார், மண்டல தலைவர் தண்டபானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியை தயாளன், பொறியாளர் அண்ணாமலை ஆகியோர் தொகுத்து வழங்கினர். பின், ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள மனநலம் குன்றிய பெண் குழந்தைகளுக்கும், முதியோர் இல்லத்திலும் தலைவர் ராமசாமி உணவு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us