/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கி ரியா யோகா ஆன்மிக சொற்பொழிவு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
/
கி ரியா யோகா ஆன்மிக சொற்பொழிவு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
கி ரியா யோகா ஆன்மிக சொற்பொழிவு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
கி ரியா யோகா ஆன்மிக சொற்பொழிவு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
ADDED : மார் 15, 2025 06:16 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்றும், நாளையும் கிரியா யோகா ஆன்மிக சொற்பொழிவு, தியான பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யோகா செய்யும்போது உடல், மனம், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மனதில் அமைதியை நிலவச் செய்கிறது. இதில், கிரியா யோகா தனித்துவமானது. கிரியா யோகம் என்கிற யோகக்கலை ரிஷிகள், ஞானிகள் மூலம் பல்லாயிரம் காலம் போதிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து, இந்த கிரியா யோகா, பாபாஜி மூலம் சீடர்களுக்கு பரம்பரை பரம்பரையாக சென்றது. மகான் பரமஹம்ஸ யோகானந்தர், கடந்த 1917ல் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா எனும் ஒய்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்தார்.
இந்த அமைப்பு கிரியா யோகாவை தியானங்கள், ஆன்மிக சொற்பொழிவு மூலம் உலக அளவில் கொண்டு சென்றுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதுச்சேரியில் இருநாள் ஆன்மிக சொற்பொழிவு, தியான வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஓட்டல் சற்குருவில் 'கிரியா யோக தியானம்' குறித்து சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. மூத்த சன்னியாசியான சுவாமி சுத்தானந்த கிரி, கிரியா யோகாவின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கிறார். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
நாளை 16ம் தேதி, ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகர் சீனிவாசா அபார்ட்மெண்ட்ஸ் எதிரில் உள்ள ஜோதி வாசத்தில், ஒரு நாள் தியான வகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கும் இந்த வகுப்பில் தியான உத்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிரியா யோகா ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படும். அதனை பூர்த்தி செய்து தருபவர்கள், தியான வகுப்பில் பங்கேற்கலாம்.
உடலின் இயக்கத்தையும், உள்ளத்தின் ஓட்டத்தையும் இணைத்து பயிற்சியாலும், தியானத்தாலும் மனித உயிர்களை உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் கிரியா யோகா சூட்சும கலையை கற்றுக்கொள்ள இந்த இருநாள் முகாம் சிறந்த வாய்ப்பு. மேலும் விபரங்களுக்கு 90030 43169, 96000 91653 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.