/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குபேர் திருமண மண்டபம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
/
குபேர் திருமண மண்டபம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED : ஆக 20, 2024 05:09 AM

புதுச்சேரி: குபேர் திருமண மண்டபம் ரூ. 69.75 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி துவங்கியது.
சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண மண்டபம் சுற்று பகுதியில் உள்ள வாணரப்பேட்டை, நேத்தாஜி நகர், உப்பளம், சின்னகடை, வம்பாக்கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குறைந்த செலவில் சுப நிகழ்ச்சிகள் நடத்த உதவியாக இருந்தது. திருமண மண்டபம் பழுதடைந்தால் பூட்டப்பட்டு கிடந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, சுப்புராயப் பிள்ளை அறக்கட்டளை நிதி ரூ. 69.75 லட்சம் மதிப்பில் மண்டம் புதுப்பிக்கப்படுகிறது. அதற்கான பணி துவக்க விழா நேற்று நடந்தது.
அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுப்பிக்கும் பணியை வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேட்டு கொண்டார்.