/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா
/
ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா
ADDED : ஏப் 11, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சொரப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில்பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவி உள்ளது. இக்கோவிலில் உள்ளஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்க்கு வரும் 14ம் தேதி லட்சதீப விழா நடக்கிறது. விழா முன்னிட்டு, அன்று காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து 108 பால்குட அபி ேஷகம் , மாலை 5:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், தீப அலங்கார பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

