/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுச்சேரியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்' மத்திய அமைச்சரிடம் லட்சுமிநாராயணன் கோரிக்கை
/
'புதுச்சேரியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்' மத்திய அமைச்சரிடம் லட்சுமிநாராயணன் கோரிக்கை
'புதுச்சேரியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்' மத்திய அமைச்சரிடம் லட்சுமிநாராயணன் கோரிக்கை
'புதுச்சேரியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்' மத்திய அமைச்சரிடம் லட்சுமிநாராயணன் கோரிக்கை
ADDED : ஆக 17, 2024 02:53 AM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரையிலான உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியினை ஒதுக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார்.
அவரிடம், புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரையிலான உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியினை ஒதுக்க, கோரிக்கை மனுவை அளித்தார்.
இது குறித்த ஆய்வுப் பணிகளுக்காகவும், விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காகவும், போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணன், 'நிதி ஒதுக்கப்பட்டால் உடனே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு மேம்பாலப் பணிகளை ஆரம்பிக்கலாம்,' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தினார்.
மேலும், அவரிடம் இந்திரா சதுக்கம் முதல் முள்ளோடை வரை உள்ள இரு வழிச் சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைக்கவும், ஒரு முறை தளர்வு அடிப்படையில் நிதி ஒதுக்கி, புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதிய புறவழிச் சாலை வந்தாலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, இந்திரா சதுக்கத்தையும் ராஜிவ் சதுக்கத்தையும் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கும், புதுச்சேரி - கடலுார் சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்தவும் தேவையான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க, மத்திய தரைவழிப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த சந்திப்பில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.