நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வெளிமாநில வாலிபரில் லேப்டாப்பை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது திஷாத், 28, இவர், புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். இவர் முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை வெளியே சென்று இரவு 8:௦௦ மணிக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது அறையில் வைத்திருந்த லேப்டாப், மொபைல் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.