/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கீழ்பரிக்கல்பட்டில் பழுதான ஹைமாஸ் விளக்கு
/
கீழ்பரிக்கல்பட்டில் பழுதான ஹைமாஸ் விளக்கு
ADDED : மே 27, 2024 05:16 AM

பாகூர்: கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில், பழுதான ஹைமாஸ் விளக்கு கம்பத்தில், மின் விளக்குகளை பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு புதுநகர் பேட் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, ஏரிக்கரை சந்திப்பு அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. பயன்பாட்டில் இருந்து வந்த இந்த விளக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது.
இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, அதிலிருந்த எல்.இ.டி., மின் விளக்குகள் மாயமான நிலையில் வெறும் கம்பம் மட்டுமே காட்சி பொருளாக நிற்கிறது.
இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளதால், பொது மக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும், பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, காட்சிப் பொருளாக நிற்கும் ஹைமாஸ் கம்பத்தில் மின் விளக்குகளை பொருத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

