நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : ராம்பாக்கம் முத்தலாம்மன் கோவிலில் மண்டல அபிேஷக விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்தலாம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா, கடந்த மே மாதம் 19ம் தேதி நடந்தது. பின் மண்டல அபிேஷகம் துவங்கி, 48 வது நாளான நேற்று மண்டல அபி ேஷகம் பூர்த்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காலை 8.30 மணிக்கு கலசாபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு அம்மன் மாடவீதியுலா நடந்தது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.