/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
வில்லியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஏப் 24, 2024 08:43 AM

புதுச்சேரி, : லிங்காரெட்டிப்பாளையம் வில்லியம்மன் கோவிலில், சித்திரா பவுணர்மியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் புறாக்குளம் அருகே வில்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உலக நன்மைக்காகவும், கிராமப்புறங்களில் விவசாயம் செழிக்கவும், தற்போது நிலவி வரும் வெயிலின் தாக்கம் குறையவும் வேண்டி முதலாம் ஆண்டு 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நேற்று நடந்தது.
லிங்காரெட்டிப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலம் மாடவீதி வழியாக புறாக்குளம் வந்தடைந்து, வில்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

