ADDED : செப் 10, 2024 06:50 AM

வில்லியனுார் : அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு கொம்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
வில்லியனுார் தொகுதி கொம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் நடந்த அமைச்சர் பிறந்தநாள் விழாவில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் கொம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து மதியம் நடந்த நலத்திட்ட வழங்கும் விழாவிற்கு மோகித் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கொம்பாக்கம் வசந்த், தேவா, வினோத் முன்னிலை வகித்தனர்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு புடவை மற்றும் உணவு மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், மகளிர் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

