/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி. கல்லுாரி-டாப் ஸ்கில்ட் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்
/
எம்.ஐ.டி. கல்லுாரி-டாப் ஸ்கில்ட் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்
எம்.ஐ.டி. கல்லுாரி-டாப் ஸ்கில்ட் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்
எம்.ஐ.டி. கல்லுாரி-டாப் ஸ்கில்ட் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்
ADDED : ஆக 25, 2024 05:52 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) எ.ஐ.எம்.எல்.துறை - டாப் ஸ்கில்ட் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், தொழில் துறை, கல்வித்துறைக்கும் இடையே பல்வேறு ஈடுபாடுகளை முறைப்படுத்துவது.
வளங்கள் மற்றும் மனித வளத்திற்காக இரு தரப்பினராலும் நீண்டகால திட்டமிடலை செயல்படுத்துவது. வேலைத் திட்டத்தை முன்னறிவிப்பதற்கும், இரு தரப்பிலும் உள்ள அலுவலகப் பொறுப்பாளர்களின் நீண்ட கால ஈடுபாட்டை உறுதி செய்வதற்கும் உதவும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நீண்ட கால கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவும். புதிய தலைமுறை தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்பு, படிப்புத் திட்டங்கள், அறிவுப் பகிர்வு, இன்டன்ஷிப் பயிற்சி போன்றவற்றை உருவாக்க கல்லுாரி மாணவர்களுக்கான இன்குபேஷன் செல்களை நிறுவுவதையும் உள்ளடக்கியது.
தொழில்துறையினரின் விருப்பப்படி மாணவர்களை வேலைக்குச் சேர்க்கும் நோக்கத்துடன் தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் கல்வி சகோதரத்துவம் இடையேயான இடைமுகம் மூலம் ஆரம்ப கவனம் செலுத்தப்படும்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி முதல்வர் மலர்க்கண், வேலை வாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார், டீன் அகாடமிக்ஸ் தேன் மொழி, எ.ஐ.எம்.எல். துறை தலைவர் ராஜ் பாரத், டாப் ஸ்கில்ட் அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி விஜய், மென்பொருள் பொறியாளர் தேவிஸ்ரீ பரந்தாமன், மென்பொருள் உருவாக்குனர் சுபத்ரா சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.