ADDED : ஜூன் 28, 2026 04:40 PM
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் நாராயணசாமி எம்.எல்.ஏ., கள ஆய்வு மேற்கொண்டார்.
ரெட்டியார்பாளையம், ஜெயா நகர், சக்தி விநாயகர் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் ஜெயாநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ஜெயராஜா, பாலாஜி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ஜெயா நகர், கமலம் நகர், எம்.ஜி.ஆர். நகர், பாலாஜி நகர் மற்றும் அணைக்கரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதி மக்களின் குடிநீர், சாலை, மின்வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விரைநது நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
கள ஆய்வுக்கு முன் ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
