/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ. பாதுகாவலர்களுக்கு புது உத்தரவு
/
எம்.எல்.ஏ. பாதுகாவலர்களுக்கு புது உத்தரவு
ADDED : ஜூலை 07, 2024 03:47 AM
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு ஐ.ஆர்.பி.என்., மற்றும் ஆயுதப்படை பிரிவு போலீ சார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய போலீசார், எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். துப்பாக்கியில் தோட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொண்டு பணியில் இருக்க வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.