/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., முதலாண்டு தேர்வு ரத்து ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்
/
எம்.பி.பி.எஸ்., முதலாண்டு தேர்வு ரத்து ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்
எம்.பி.பி.எஸ்., முதலாண்டு தேர்வு ரத்து ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்
எம்.பி.பி.எஸ்., முதலாண்டு தேர்வு ரத்து ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்
ADDED : ஆக 06, 2024 07:15 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று துவங்கவிருந்து எம்.பி.பி.எஸ்., முதலாண்டு தேர்வை மத்திய பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதி தந்தார்.
புதுச்சேரி சட்டசபை நேற்று கூடியதும், எதிர்க்கட்சித்தலைவர் சிவா, புதுச்சேரி பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., தேர்வு ரத்து குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர், புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு ரத்திற்கு இரு காரணங்கள் சொல்கிறார்கள். தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அத்துடன் கல்லுாரி இடங்களுக்கு இணைப்பு அங்கீகாரம் தனியார் கல்லுாரிகளுக்கு கிடைக்காததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் விளக்கம் தரவேண்டும் என்றார்.
முதல்வர் ரங்கசாமி: முழு விவரம் தெரியவில்லை. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து 1 மணியளவில் முதல்வர் ரங்கசாமி பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளித்து கூறியதாவது:
அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் தேசிய மருத்துவ கவுன்சில் கிளியரன்ஸ் கொடுக்க தாமதம் செய்துவிட்டனர். இதன் காரணமாக இணைப்பு கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டது.
இணைப்பு அங்கீகாரம் கொடுக்க காலதாமதம் மாணவர்களை இறுதி செய்ய காலதாமதம் ஆகிவிட்டது, அதன் காரணமாகவே தேர்வு தள்ளி போய் உள்ளது. மற்றப்படி கேள்வி தான் லீக் ஏதும் இல்லை. தேசிய மருத்துவ கவுன்சிலில் காலதாமதம் செய்ததோடு மட்டுமின்றி நிறைய கல்லுாரிகளுக்கு அபராதம் போட்டுள்ளனர். புதிய தேர்வு அட்டவணை பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.