/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு நமச்சிவாயம் 'அட்வைஸ்'
/
வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு நமச்சிவாயம் 'அட்வைஸ்'
வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு நமச்சிவாயம் 'அட்வைஸ்'
வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும் தொண்டர்களுக்கு நமச்சிவாயம் 'அட்வைஸ்'
ADDED : ஏப் 10, 2024 01:58 AM

காரைக்கால் : 'வீடு, வீடாக சென்று மத்திய அரசு திட்டங்கள் குறித்து பா.ஜ.,வினர் விளக்கி கூறி தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும்' என, வேட்பாளர் நமச்சிவாயம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேட்பாளர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,கள் கணபதி, வி.கே.கணபதி, முன்னாள் மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசும்போது, 'காரைக்காலில் உள்ள நெடுங்காடு, திருப்பட்டினம் நிரவி, காரைக்கால் வடக்கு, தெற்கு, திருநள்ளாறு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளிலும் அதிகம் ஓட்டுகள் பெற அனைவரும் பாடுபட வேண்டும். வீடு ,வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும்.
காரைக்காலில் இரண்டு நாட்கள் முதல்வர் முன்னிலையில் ஓட்டு கேட்டு வருகிறோம்.
மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதால் வெற்றி நிச்சயம்.
பேரளம் அகலபாதை திட்டம், நான்குவழிச்சாலை, துறைமுக விரிவாக்கம், மீன்பிடித் துறைமுகத்தை மேற்படுத்துவது, ஜிப்மர் மருத்துவமனை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மீன்பதப்படுத்தும் தொழிற்சாலை, கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக்கு குரல் கொடுத்து தீர்வு காணப்படும்' என்றார்.

