தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு


UPDATED : ஜூலை 20, 2026 07:41 PM

ADDED : ஜூலை 20, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 07:41 PM ADDED : ஜூலை 20, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், ஒட்டு மொத்த நிர்வாகமும் ஸ்பித்து போயுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜ., மற்ற கட்சிகளின் எம்.பி.,க்களை தங்கள் பக்கம் இழுத்து, பலத்தை உயர்த்த பார்க்கின்றனர். அயோத்தி ராமர் கோவிலில் ஊழல் செய்தவர்கள், நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் ஒட்டு மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்து போய்உள்ளது. அரிசி எப்போது போடுவார்கள் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

முன்பு போலி மருந்து விவகாரத்தில், சிக்கியவர்கள் தற்போது ஜாமினில் வந்து, சி.பி.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறையில் உள்ளனர். இதில் பா.ஜ., என்.ஆர்.காங்., கட்சியினர் சம்பந்தபட்டுள்ளனர்.

தற்போது குருமாம்பட்டில், 125 வகையான போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். போலி மருந்து விவகாரத்தில் கூட்டு சதி நடந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட போலி மருந்து தொழிற்சாலை குறித்து சி.பி.ஐ., விசாரிக்கவேண்டும். இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கவர்னர் கைலாஷ்நாதன் அவர்கள், முதல்வரை காமராஜரோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். காமராஜர் கரைபடாத வாழ்க்கைக்கு சொந்தமானவர்.ரங்கசாமி அப்படிபட்டவர் இல்லை.

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், ஒரு பேராசிரியர் கூட கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us