/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாராயணசாமி தனது சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்: முதல்வர் ரங்கசாமி நாராயணசாமி தனது சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்: முதல்வர் ரங்கசாமி

ADDED : ஏப் 02, 2024 04:22 AM
புதுச்சேரி : 'நாராயணசாமி எதையாவது சொல்லனும் என்று சொல்லிக் கொண்டுள்ளார்' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் 1000 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி 'திடுக்', குற்றச்சாட்டினை முன்வைத்து நேற்று பிரசாரம் செய்தார்.இந்நிலையில் உப்பளம் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து ஓட்டு சேகரித்த முதல்வர் ரங்கசாமி, நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார்.
பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, 'பா.ஜ.,வேட்பாளரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் 1000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இவருக்கு ஆயிரம் கோடி சொத்துனா, அவருக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கும். அவர் (நாராயணசாமி) முதல்வர், மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அதுவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்படியென்றால் அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். அதை அவர் சொன்னால் நல்லா இருக்கும்.நம்மகிட்டேயும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும். எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அவர் எதையாவது சொல்லனும் என்று சொல்லிக்கொண்டுள்ளார்.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.