/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை காக்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : ஆக 28, 2024 05:46 AM

புதுச்சேரி, : 'புதுச்சேரி மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிபோகாத வகையில், 'குரூப்-பி' பணியிடங்களை நிரப்ப வேண்டும் ' என, முதல்வரிடம், நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்களுடன், நேரு எம்.எல்.ஏ., நேற்று சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறை கடந்த வாரம், 256 அரசிதழ் பதிவு பெறாத, 'குரூப்-பி' பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பில், வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தாய் மொழியான தமிழை புறக்கணிக்கும் செயல். இந்த தேர்வு தமிழில் நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
வினாத்தாளின் முதல் மற்றும் இரண்டாம் தாள், சரியான விடையை தேர்ந்தெடுக்கும் 'அப்செக்டிவ்'வகையில் உள்ளதும் நடைமுறைக்கு மாறானது. மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து தான் வினாக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கக்கூடிய பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பில், பொது பிரிவினருக்கு வயது வரம்பு (32+3) 35 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சட்டப்படியான வயது தளர்வும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.