/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சில் செயின் திருடிய மர்ம நபருக்கு வலை
/
பஸ்சில் செயின் திருடிய மர்ம நபருக்கு வலை
ADDED : நவ 06, 2024 07:22 AM
புதுச்சேரி: பஸ்சில் பெண்ணிடம் செயினை திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி சண்முகாபுரம் சுப்பையா வீதியைச் சேர்ந்தவர் உமா 51, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அட்டன்டர்.
இவர் நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் மகள் மகாலட்சுமியுடன், வீட்டிலிருந்து சுகாதாரத்துறை சொசைட்டிக்கு செல்வதற்காக, தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
புது பஸ் நிலையம் அந்தோணியர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய உமா, தான் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க ஜெயின் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் உமா கழுத்தில் இருந்த செயினை லாவகமாக திருடிச் சென்றுள்ளனர்.
உமா புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.