/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 21, 2024 05:02 AM
புதுச்சேரி: ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. 967 ஓட்டுச்சாவடிகளில் 1934 வாக்கு பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 78.90 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடக்கிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை லாஸ்பேட்டை மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய மையங்களில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதே போல், காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையம், மாகே ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் டாக்டர் எஸ்.ஆர்.கே., கலைக்கல்லுாரி உள்ளிட்ட மையங்களில் ஸ்ட்ராங் ரூம்களில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் ஆயுதப்படை போலீசார், துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு சி.சி.டி.வி., பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேவையான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அறை, மேஜைகள், சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்ட தேர்தல் துறை, போலீஸ் உயரதிகாரிகள் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.

