ADDED : மே 25, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில்., பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதில், மடுவுபேட் அருகில் பணிகள் முடிவடைந்து தோண்டப்பட்ட பள்ளங்கள் மண் கொண்டு மூடப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ், அமுதசுரபி பெட்ரோல் பங்கு சாலையோர பகுதியில் பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்தினார்.
அப்போது, மூடப்பட்டிருந்த பாதாள சாக்கடை மேனுவல் பள்ளத்தில் பஸ்சின் பின்பக்க டயர் சிக்கி கொண்டது.
பஸ் எடுக்க முடியாததால் பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கினர். பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு, பஸ்சை அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றது.

