தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை 

அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை 

அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை 


ADDED : ஆக 09, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 45ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.

புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 45ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், 9 மணி முதல் 11 மணி வரையிலும், 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஆகிய ஐந்து வேளையும் நடந்த லட்சார்ச்சனையில் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us